Posts

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

Image
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அனைவருக்கும் உணவு வழங்க கூறினார் இதனடிப்படையில் தவெக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ் அறிவுறுத்தலின் பேரில் பொள்ளாச்சி இரயில் நிலையம் மார்க்கெட் ரோடு சந்தைப்பேட்டை நகராட்சி அலுவலகம் முன்பும் உழவர் சந்தை உட்பட பல பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தவெக கோவை தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி ஒருங்கிணைப்பாளர் ரேணுகாதேவி தலைமையில் தவெக மகளிரணி நகர செயலாளர் லட்சுமி, பொருளாளர் பிரியாசுபாகர், பிரேமா, பானு மற்றும் மகளிரணி நிர்வாகிகள் தவெக நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவருக்கும் உணவு வழங்கினார்கள்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

Image
அதிமுக கோட்டையை தகர்த்த தவெக விக்னேஷ்.                   கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதி அஇஅதிமுக வின் கோட்டையாக இருந்து வந்தது நடந்த 2026  சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் செ.தாமோதரன் திமுக சார்பில் சபரி கார்த்திகேயன் தவெக சார்பில் தவெக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் விக்னேஷ்,  நாதக சார்பில் பானுப்பிரியா ஆகியோர் போட்டியிட்டனர் கிணத்துக்கடவு தொகுதியில் மொத்தம் 3 லட்சத்து 5 ஆயிரத்து 878 வாக்காளர்கள் உள்ளனர் இதில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 349 வாக்குகள் பதிவானது.  வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றிலிருந்து தவெக வேட்பாளர் விக்னேஷ் தொடர்ந்து முன்னிலையிலேயே தொடர்ந்து வந்தார் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் விக்னங 99 ஆயிரத்து 950 வாக்குகள் பெற்று 11 ஆயிரத்து 710 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயன் 88 ஆயிரத்து 240 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார் அதிமுக வேட்பாளர் செ.தாமோதரன் 67 ஆயிரத்து 789 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திற்கு சென்றார் கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு தொகுத...

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

Image
பொள்ளாச்சியில் மண்வெட்டியால் தாக்கி தொழிலாளி கொலை  கணவன் மனைவி கைது   .              கொலையான கருப்புசாமி   கொலையாளிகள் சந்திரன் காளீஸ்வரி  பொள்ளாச்சி அருகே தொழிலாளியை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்து புதைத்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை காளியாபுரம் மாட்டையன் கோயில் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு தோட்டத்தில் யாரோ ஒருவர் புதைக்கப்பட்டு இருப்பதாகவும், கை மட்டும் வெளியே தெரிவதாகவும் போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து வால்பாறை சரக காவல் துணை கண்காணிப்பாளர் பவித்ரா தலைமையில் ஆனைமலை இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், சப் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு ஒரு ஆண் உடல் புதைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ண சாமி  முன்னிலையில் சம்பவ இடத்தில் இருந்து உடல் தோண்டி எடுக்கப்பட்டது. கோவையில் இருந்து வந்திருந்த அரசு மருத்துவர்கள் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர். இறந்தவர் ஆண...

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

Image
கோவையில் கஞ்சா வழக்கில் இரண்டு பேருக்கு 14 ஆண்டு சிறை   ரூ.3,00,000/- அபராதம்   சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து போதைப்பொருள் இல்லாத கோவை மாவட்டத்தை உருவாக்கும் நோக்கில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *Dr.K. கார்த்திகேயன் தொடர்ந்து பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களை முற்றிலுமாக ஒழிக்கும் பொருட்டு  குறிப்பாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மீது சட்டப்படி துரிதமாக வழக்குகள் பதிவு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்  என அனைத்து காவல் நிலையங்களுக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார் மேலும், இவ்வகை வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு சம்மந்தப்பட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் முறையாக தாக்கல் செய்து   துரிதமாக தீர்ப்புகளை பெற்றிட காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார் அதன் அடிப...

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

Image
பொள்ளாச்சி கொலை குற்றவாளிகள் 6 நபர்களுக்கு  தலா ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம் விதித்து தீர்ப்பு கோவை மாவட்டம் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு ஆனந்த் 42 என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய பகுதியை சேர்ந்த தியாகராஜன் மகன் சதீஷ்குமார் 33  சிரோசி மகன் வின்சென்ட் 26 குப்புசாமி மகன் அம்பன் @சிவமூர்த்தி 39  மணிகண்டன் மகன் கண்ணன்@ ஜெயக்குமார் 19 கேசவன் மகன் குட்டப்பன் @ விவின்தாஸ் 30 மற்றும் சீனிவாசன் மகன் காளிதாஸ் @கார்த்தி  25  ஆகியோர்கள் மீது  பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கின் விசாரணை  கோவை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை   25.02.2026 முடிவு பெற்று கொலை குற்றவாளிகளான மேற்படி ஆறு நபர்களுக்கும் தலா ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம்  விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார் இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீ...

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

Image
பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையம் தமிழக அளவில் மூன்றாம் இடம்  கோவை மாவட்டம், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையம்  தமிழக அளவில் சிறப்பான சேவைக்காக மூன்றாவது சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேற்படி காவல் நிலையம் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் மேற்கொண்ட விரைவான விசாரணைகள்  மனநல ஆலோசனை சேவைகள்  பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொதுமக்கள் நட்பு காவல் சேவை மற்றும் குற்றவியல் விசாரணைகளில் வெளிப்படுத்திய திறமை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பெருமை கிடைத்துள்ளது இந்நிலையில் தமிழகத்தின்  முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பாக தேர்வு செய்யப்பட்ட காவல் நிலையங்களுக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்  இந்த விருது  பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான பணியைப் பிரதிபலிக்கிறது. மேலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த சாதனையை பாராட்டி  பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் மனிதநேயத்...

மக்கள் வெளிச்சம்

Image
இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாநில செயலாளராக வழக்கறிஞர் அசோக்குமார் நியமனம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் மாநில செயலாளராக வழக்கறிஞர் அசோக்குமார் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு திருப்பூர் கோவை நீலகிரி பொள்ளாச்சி ஆகிய 5 பாராளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்திற்கு இவரை  அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் (MP) நியமித்துள்ளார்.  வழக்கறிஞர் அசோக்குமார் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவப் பருவத்தில் முற்போக்கு மாணவர் கழகத்திலும், வழக்கறிஞரான பின்பு வழக்கறிஞரணியின் சமத்துவ வழக்கறிஞர் சங்கத்திலும், அதன்பிறகு  பொள்ளாச்சி மற்றும் வால்பாறை சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய கோவை தெற்கு மாவட்ட செயலாளராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் அசோக்குமாருக்கு  அக்கட்சியின் நிர்வாகிகள், கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தோழமை முற்போக்கு இயக்கங்களின் சார்பாக அவரது பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.