மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சி கொலை குற்றவாளிகள் 6 நபர்களுக்கு தலா ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம் விதித்து தீர்ப்பு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு ஆனந்த் 42 என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய பகுதியை சேர்ந்த தியாகராஜன் மகன் சதீஷ்குமார் 33 சிரோசி மகன் வின்சென்ட் 26 குப்புசாமி மகன் அம்பன் @சிவமூர்த்தி 39 மணிகண்டன் மகன் கண்ணன்@ ஜெயக்குமார் 19 கேசவன் மகன் குட்டப்பன் @ விவின்தாஸ் 30 மற்றும் சீனிவாசன் மகன் காளிதாஸ் @கார்த்தி 25 ஆகியோர்கள் மீது பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கின் விசாரணை கோவை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை 25.02.2026 முடிவு பெற்று கொலை குற்றவாளிகளான மேற்படி ஆறு நபர்களுக்கும் தலா ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்
இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற தலைமை காவலர் அறிவழகன் HC 1720 ஆகியோரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Kகார்த்திகேயன் பாராட்டினார்.
Comments
Post a Comment