மக்கள் வெளிச்சம்

இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாநில செயலாளராக வழக்கறிஞர் அசோக்குமார் நியமனம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் மாநில செயலாளராக வழக்கறிஞர் அசோக்குமார் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு திருப்பூர் கோவை நீலகிரி பொள்ளாச்சி ஆகிய 5 பாராளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்திற்கு இவரை  அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் (MP) நியமித்துள்ளார். 
வழக்கறிஞர் அசோக்குமார் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவப் பருவத்தில் முற்போக்கு மாணவர் கழகத்திலும், வழக்கறிஞரான பின்பு வழக்கறிஞரணியின் சமத்துவ வழக்கறிஞர் சங்கத்திலும், அதன்பிறகு  பொள்ளாச்சி மற்றும் வால்பாறை சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய கோவை தெற்கு மாவட்ட செயலாளராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் அசோக்குமாருக்கு  அக்கட்சியின் நிர்வாகிகள், கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தோழமை முற்போக்கு இயக்கங்களின் சார்பாக அவரது பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்