மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவையில் கஞ்சா வழக்கில் இரண்டு பேருக்கு 14 ஆண்டு சிறை   ரூ.3,00,000/- அபராதம் 



 சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து போதைப்பொருள் இல்லாத கோவை மாவட்டத்தை உருவாக்கும் நோக்கில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *Dr.K. கார்த்திகேயன் தொடர்ந்து பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்
போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களை முற்றிலுமாக ஒழிக்கும் பொருட்டு  குறிப்பாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மீது சட்டப்படி துரிதமாக வழக்குகள் பதிவு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்  என அனைத்து காவல் நிலையங்களுக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்
மேலும், இவ்வகை வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு சம்மந்தப்பட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் முறையாக தாக்கல் செய்து   துரிதமாக தீர்ப்புகளை பெற்றிட காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்
அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டு அரசால் தடை செய்யப்பட்ட  54 கிலோகிராம் கஞ்சாவை சட்டத்திற்கு விரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த குற்றத்திற்காக சூலூர் காவல் நிலையத்தில் நாகராஜ்  51  மற்றும் கருப்புசாமி  45 ஆகியோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது இவ்வழக்கு கோவை மாவட்டம் இன்றியமையா பண்ட விதிக்கு உட்பட்ட வழக்கியல் சிறப்பு நீதிமன்றம் நீதிமன்றத்தில்  EC Court விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று இன்று 07.04.2026-ம் தேதி எதிரிகளான  நாகராஜ் மற்றும் கருப்புசாமி ஆகிய இருவருக்கும்  14 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூபாய் 3,00,000/அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்
இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற தலைமை காவலர்   மலர்விழி  WHC 2149 ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.கார்த்திகேயன் பாராட்டினார்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்