மக்கள் வெளிச்சம் நாளிதழ்

அதிமுக கோட்டையை தகர்த்த தவெக விக்னேஷ்.                  


கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதி அஇஅதிமுக வின் கோட்டையாக இருந்து வந்தது நடந்த 2026  சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் செ.தாமோதரன் திமுக சார்பில் சபரி கார்த்திகேயன் தவெக சார்பில் தவெக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் விக்னேஷ்,  நாதக சார்பில் பானுப்பிரியா ஆகியோர் போட்டியிட்டனர் கிணத்துக்கடவு தொகுதியில் மொத்தம் 3 லட்சத்து 5 ஆயிரத்து 878 வாக்காளர்கள் உள்ளனர் இதில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 349 வாக்குகள் பதிவானது.  வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றிலிருந்து தவெக வேட்பாளர் விக்னேஷ் தொடர்ந்து முன்னிலையிலேயே தொடர்ந்து வந்தார் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் விக்னங 99 ஆயிரத்து 950 வாக்குகள் பெற்று 11 ஆயிரத்து 710 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயன் 88 ஆயிரத்து 240 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார் அதிமுக வேட்பாளர் செ.தாமோதரன் 67 ஆயிரத்து 789 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திற்கு சென்றார் கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு தொகுதி என்றுமே அதிமுகவின் கோட்டை என இருந்து வந்த வரலாற்றை தவெக விக்னேஷ் இந்த கோட்டையை தகர்த்து தவெகவின் கோட்டையாக மாற்றி வெற்றி வாகை சூடினார்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்