மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை ஊரக மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்க உறுப்பினர்கள் மற்றும்  குடும்பத்தினருக்கு கண் சிகிச்சை முகாம் 




 பொள்ளாச்சி வெங்கடேச காலனி அப்பர் வீதியில் உள்ள வாசன் ஐ கேர் மருத்துவமனையில் 
இலவச கண் பரிசோதனை முகாம் கடந்த 23 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து ஐந்து நாட்கள் கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை நடைபெற்று செப் 27ஆம் தேதியுடன் நிறைவுற்றது. 
இந்த கண் பரிசோதனை முகாமில் ஓய்வு பெற்ற காவலர்களும் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் கலந்துகொண்டு பயன் பெற்றனர். 
ஆண்டுதோறும் இந்த கண் சிகிச்சை முகாம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கண் சிகிச்சை முகாம் ஓய்வு பெற்ற காவலர் மற்றும் அவர்களது குடும்பத்தாரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கத்தின் கௌரவத் தலைவர் S.P.காசிவிஸ்வநாத், தலைவர் செல்வராஜ், 
செயலாளர் பாலன், 
பொருளாளர் U.V நடராஜ் ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டது.
வாசன் ஐ கேர் மருத்துவமனை முதன்மை மருத்துவர்  தர்மலிங்கம், 
கண் நரம்பியல் நிபுணர்  அனுஷாவெங்கட்ராமன்,
மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து செவிலியர்கள் மற்றும் அலுவலர்களுக்கும்
ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கத்தின் மக்கள் தொடர்பு செயலாளர்
அ.மைக்கேல் சகாயராஜ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்