மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவையில் 2191.858 கிலோ கஞ்சா போதைப்பொருள் அழிப்பு 



கோவை  திருப்பூர் ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 1317 கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 2191.858 கிலோ கிராம் கஞ்சா  போதை பொருள் அழிப்பு குழு தலைவர் மற்றும் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் சசிமோகன் இ.கா.ப  தலைமையில் போதை பொருள் அழிப்பு குழு உறுப்பினர்கள் முன்னிலையில் முழுமையாக அழிக்கப்பட்டது
மேற்படி வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா நீதிமன்றத்தின் உரிய உத்தரவின்படி கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் உள்ள அரசு அனுமதி பெற்ற தனியார் நிறுவனத்தில் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பான முறையில் அழிப்பு செய்யப்பட்டது
கோவை  திருப்பூர் நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக காவல்துறை தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக  இதற்கு முன்னர் இதுபோன்ற கஞ்சா அழிப்பு நடவடிக்கை மூன்று முறை  கோவை நீலகிரி ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களை பதிவு செய்யப்பட்ட  797 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 1624.696 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அழிப்பு நடவடிக்கை ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்  இன்றைய நிகழ்வு  நான்காவது முறையாக நடைப்பெற்றது  என்பது குறிப்பிடத்தக்கது
போதைப் பொருட்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தீமைகளை முற்றிலும் தடுக்கும் நோக்கில் இவ்வாறான பறிமுதல் மற்றும் அழிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும்  போதைப் பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் பொதுமக்கள் போதைப் பொருள் விற்பனை அல்லது கடத்தல் குறித்து தகவல் அறிந்தால், அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அல்லது காவல்துறை உதவி எண்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்