மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை நீலாம்பூரில் புதிய காவல் நிலையம் 

முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார் 


கோவை மாவட்டத்தில் கோவை மாநகர எல்லைகளை ஒட்டியுள்ள சூலூர், கோவில்பாளையம் மற்றும் அன்னூர் காவல் நிலையங்களின் வரம்பிற்குள் வரும் பகுதிகளில் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாகவும், ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருவதாலும், சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பிற்காக கூடுதல் காவல் நிலையம் அவசியம் என்பதனை கருத்தில் கொண்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கோவை சரக காவல் துணை தலைவர்  சசிமோகன் பரிந்துரையின் பேரில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர்  செந்தில்குமார் ஒப்புதல் பெற்று தமிழக அரசுக்கு  கருத்துருவினை அனுப்பப்பட்டது  இதனை பரிசீலித்த தமிழக முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் புதிய காவல் நிலையத்தின் அவசியத்தை உணர்ந்து, கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில்  அரசாணையின் மூலம் ஒரு காவல் ஆய்வாளர், மூன்று உதவி ஆய்வாளர்கள், மற்றும் 46 காவலர்கள் என மொத்தம் 50 பணியிடங்களுடன் நீலம்பூர் பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்க ஆணை வழங்கினார் அதனடிப்படையில் (22.12.2025) அன்று தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக நீலம்பூர் காவல் நிலையத்தை துவக்கி வைத்தார் மேற்படி நிகழ்ச்சியில் காவல்துறை மேற்கு மன்ற தலைவர்  செந்தில்குமார்  கோவை சரக காவல்துறை துணைத் தலைவர்  சசிமோகன்  கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  கார்த்திகேயன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர் தற்போது ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 19 காவலர்கள் என மொத்தம் 20 காவலர்களுடன் (22-12-2015) அன்று முதல் காவல் நிலையம் செயல்படத் தொடங்கியுள்ளது. காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் இந்த புதிய நீலம்பூர் காவல் நிலையம்
முத்துகவுண்டன் புதூர், நீலம்பூர், ராசிபாளையம், மயிலம்பட்டி, அரசூர், வெள்ளணைப்பட்டி, நாரணபுரம் மற்றும் பச்சாபாளையம்
என  8 தாய் கிராமங்கள் மற்றும் 23 துணை குக்கிராமங்களையும் உள்ளடக்கி செயல்பட உள்ளது இந்த காவல் நிலையம் உருவாக்கப்பட்டதன் மூலம், இப்பகுதி பொதுமக்கள் தங்களது புகார்களை மிக அருகிலேயே மற்றும் எளிதான முறையில் பதிவு செய்து விரைவாக நிவாரணம் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், காவலர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம், இப்பகுதிகளில் நடைபெறும் குற்றச்செயல்களைத் தடுக்கவும் சட்டம் மற்றும் ஒழுங்கை வலுப்படுத்தும் வகையிலும் இது பெரும் பங்காற்றும் குறிப்பாக, ஏழை எளிய மக்களுக்கு பாதுகாப்பும் உதவியும் வழங்கும் வகையில் தமிழக அரசின் மக்கள் நல திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த காவல் நிலையம் செயல்பட உள்ளது

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்