மக்கள் வெளிச்சம் நாளிதழ்

வால்பாறை வாட்டர் பால்ஸ் பகுதியில் யானை தாக்கி குழந்தை உட்பட இருவர் பலி

 

கோவை மாவட்டம் வால்பாறை அருகாமையில் உள்ள ஊமையாண்டி முடக்கு வாட்டர் ஃபால்ஸ் எஸ்டேட் பகுதியில் இரவு 4 மணி அளவில் டென்சிங் என்ற  கொம்பன் யானை. ஆஷா வயது 50. ஹேமா ஸ்ரீ வயது இரண்டரை வயது  மதிக்கத்தக்க குழந்தை  பாட்டி பேத்தி இருவரையும். தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஆறு மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டு நபரை சுற்றுப்பயணம் வந்துள்ள ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவரையும் டென்சிங் யானை கொன்றுள்ளது  குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அந்த யானையை பிடிப்பதற்கு பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் வால்பாறை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அச்சத்தில் தொழிலாளர்கள் வேலை செய்யும் அவலம் ஏற்பட்டு வருகிறது என வேதனையுடன் தெரிவித்தனர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்