மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவையில் மாணவ மாணவிகளுக்கு கல்விக் கடன் மேளா
கோவை மாவட்டத்தில் 2024-2025 பத்தாம் வகுப்பு , பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரிகள், பாலிடெக்னிக், ITI போன்ற கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியில் சேர்ந்துள்ள மாணவ மாணவிகள் தங்கள் உயர்கல்விக்கான கல்வி கட்டணத் தொகையினை கல்வி கடனாக பெறுவதற்கு முன்னணி வங்கிகளில் இருந்து கல்விக்கடன் மேளா எதிர்வரும் காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் P S G பொறியியல் கல்லூரி பீளமேடு, மற்றும் 17.09.2025 டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி பொள்ளாச்சி 19.09.2025 கற்பகம் உயர்கல்வி நிறுவனங்கள் ஈச்சனாரி ஆகிய மூன்று வளாகங்களில் நடைபெற உள்ளது. அனைத்து வகையான கல்லூரிகளில் பயிலும் முதலாமாண்டு இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு கல்விக்கடன் தேவைப்படும் மாணவர்கள் கீழ்கண்ட ஆவணங்களுடன் நேரில் வந்து இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தேவைப்படும் ஆவணங்கள்
1. பான் கார்டு
2. ஆதார் அட்டை
3. 10 வகுப்பு 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
4. மாற்றுச் சான்றிதழ்
5. கல்லூரி கட்டண ரசீது
6. கல்லூரி சேர்க்கை கட்டண ரசீது
7. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -2
8. குடும்ப அட்டை நகல் ( ரேஷன் கார்டு)
9. வங்கி கணக்கு புத்தகம்
10. உறுதிமொழி சான்று ( BONAFIDE CERTIFICATE )
இளங்கலை பட்டப் படிப்பு முடித்து முதுகலை பட்டப்படிப்பில் சேர இருப்பவர்கள் இத்துடன்
1. இளங்கலை பட்ட சான்றிதழ்
2. இளங்கலை மதிப்பெண் சான்றிதழ்
3. முதுகலை பட்ட படிப்பில் சேர்ந்ததற்கான ஆவணங்கள்
4. கல்லூரி அடையாள அட்டை
Comments
Post a Comment