மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை பெண் பத்திரிகையாளர்களுக்கு இலவச மேமோகிராம் பரிசோதனை முகாம்
கோவை கேஎம்சிஎச் மருத்துவமனை சார்பில் 40 வயதிற்கு மேற்பட்ட பெண் பத்திரிகையாளர்களுக்கு இலவச மேமோகிராம் பரிசோதனை முகாம் அக்டோபர் முதல் வாரத்தில் கேஎம்சிஎச் மருத்துவமனை வளாகத்தில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முகாமில் கோவை மாவட்டத்தை சேர்ந்த பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் அனைத்து பத்திரிகையாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் (40 வயதிற்கு மேற்பட்ட பெண் குடும்ப உறுப்பினர்கள் மட்டும்) கலந்துகொண்டு இலவச மேமோகிராம் பரிசோதனை செய்து கொள்ளலாம். விருப்பமுள்ள பத்திரிகையாளர்கள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் 19.09.2025 மாலை 5மணிக்குள் தங்கள் பெயரினை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது.
Comments
Post a Comment