மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சியில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு
துறை ரீதியாக குறைகளை கேட்டறிந்து மேடையில் பதிலளித்தார்
பொள்ளாச்சியில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என புரட்சித்தமிழரின் எழுச்சி பயணம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று பொள்ளாச்சியில் விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்ட கூட்டத்தில் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார் துறை ரீதியாக விடுக்கப்பட்ட கோரிக்கைகள்
கைத்தறி நெசவாளர் சங்கத்தினார்.... கோரிக்கை
திராவிட மாடல் ஆட்சி என்று வந்ததோ அன்றே கைத்தறி நெசவு நலிந்து விட்டது. வேறு பணிகளுக்கு செல்லும் அவல நிலைக்கு செல்லும் சூழலில் தள்ளப்பட்டுள்ளனர்.
கைத்தறி நெசவாளர்களுக்கு இதுவரை ஒரு வீடு கூட அமைத்து கொடுக்கவில்லை. நூல் விலை, பட்டு விலை உயர்வு காரணமாக தொழில் நசிந்து விட்டது
மருத்துவ காப்பீடு திட்டத்தை உருவாக்கி தர வேண்டும்
நலிவடைந்த. நெசவாளர்களுக்கு ஊக்க தொகை வழங்க வேண்டும்.
தொழில் வர்த்தக சபை
பொள்ளாச்சியை மாவட்டமாக உருவாக்க வேண்டும். நீங்கள் முதல்வராக வரும் போது பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அப்போது தான் பொள்ளாச்சி பகுதி வளர்ச்சி பெரும்.
தென்னிந்திய தென்னை சாகுபடியாளர்கள் சங்கம்
கேரள வாடல் நோய், சுருள் பூச்சி உள்ளிட நோய் தாக்குதல் காரணமாக தென்னை பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது. ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
தென்னை நல வாரியம் அமைக்க வேண்டும்.தேங்காய் சம்பந்தப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உருவாக்கி சந்தைப்படுத்த செய்ய வேண்டும்.
சமுதாய போயர் சமூக மக்கள் கூட்டமைப்பு.
போயர் சமூகத்திற்கு நலவாரியம் அமைத்து தரவேண்டும்.
தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு.
தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த நான்கு வருடங்கள் நோய் பாதிப்பு காரணமாக 7000ஹெக்டர் குறைந்து விட்டது.
கடந்த நண்டு ஆண்டுகளில் 19 நீரா உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டது. எனவே உயர் தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்களை கொண்டு பதப்படுத்தும் முறையை கொண்டுவர வேண்டும். ரேஷன் கடைகளில் பாமயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும்
பரம்பிக்குளம் - ஆழியார் பாசன திட்டத்தில் கீழ் வடசித்தூர், புரவிபாளையம், தேவம்பாடி வலசு ஆகிய கிராமங்களை இணைத்து அங்கிருக்க கூடிய 25,000ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்
கேரளா - தமிழ்மாநில விவசாயிகள் சங்கம்..
கூடுதல் தடுப்பணைகளை கட்டி தந்து எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.
நலிவடைந்த விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்
வயது முதிர்ந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்
பால் உற்பத்தியாளர்கள் சங்கம்
பால்விலை மிகவும் குறைவான விலைக்கு கொடுத்து கொண்டு இருக்கிறோம். குறைந்த பட்சம் லிட்டருக்கு 50கிடைக்க உதவ வேண்டும்
கலப்பு தீவனத்தின் விலை உயர்வை கட்டுபடுத்த வேண்டும்.பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் கள் நல்லசாமி
அம்மா ஆட்சி காலத்தில் இருக்கும் போதே கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கி விடுவதாக அறிவித்தனர். ஆனால் இன்னும் அந்த கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
சமையல் எண்ணெய் தேவைக்காக இறக்குமதி பாமயிலுக்கு அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்கிறோம். ஆனால் நாம் உற்பத்தி செய்யும் தேங்காய் எண்ணெய் கண்டுகொள்ள தவறி விட்டோம்.
துறை ரீதியாக குறைகளை கேட்டு அறிந்தபின் மேடையின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்த தொகுப்பு ;
அதிமுக பொதுசெயலாளர் பழனிசாமி உரை
மாவட்டத்தில் ஒரு ஆலோசனை கூட்டம் என்ற முறையில் மட்டுமே நடத்திய கூட்டம் தற்போது தொகுதிக்கு ஒரு கூட்டம் நடத்தி வருகிறோம்..
மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் பசுமை வீடுகள் அமைத்து தரப்படும்.
திருமணத்திற்கு பட்டு வேட்டி சேலை வழங்க படும்
நெசவாளர்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தற்போது நிறுத்தப்பட்டது.
நிதி ஆதாரத்தை உருவாக்க முடியவில்லை, ஆனால் கடந்த 5லட்சத்து38ஆயிரம் கோடி கடன் ஏற்படுத்தியது திமுக ஆட்சி
தென்னைக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்புகளுக்கு எங்கள் ஆட்சி காலத்தில் 20 கோடி வழங்கி உள்ளோம்.
தென்னை நார் உற்பத்தி தொடர்பான கோரிக்கைகளை கண்டிப்பாக நம் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்படும்.
மாநில அரசாங்கத்தினுடைய நிதியில் இருந்து தான் அதிக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டது.
பரம்பிக்குளம் - ஆழியார் கால்வாய்கள் பராமரிப்பு பணிகளுக்கு கண்டிப்பாக ஆட்கள் நியமிக்கப்படுவார்கள்.
விவசாயிகளுக்கு ஆராய்ச்சி நிலையம் உருவாக்கி கலப்பின பசுக்களை உருவாக்கி வழங்க ஏற்பாடுகள் செய்தோம். பசுவிற்கு மட்டும் அல்ல அனைத்து விதமான கால்நடைகளுக்கான ஆராய்ச்சி நிலையம் உருவாக்கி தற்போது செயலிழந்து கிடக்கிறது. மீண்டும் நம் ஆட்சி காலத்தில் அது சீரமைத்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும்.
அளவுக்கு மீறி கடன் வாங்கியதால் தான் மக்கள் மீது அதிக வரி சுமையை ஏற்படுத்துகிறார்கள்.
ஆனைமலையாறு - நல்லார் திட்டத்தை செயல்படுத்த கேரள மாநில முதல்வர், மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசி திட்டம் செயல்படுத்த எங்கள் ஆட்சிக்காலத்தில் முனைப்பெடுதோம் ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் அதுவும் நின்று விட்டது. கண்டிப்பாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்
Comments
Post a Comment