மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவையில் சட்டத்திற்கு புறம்பாக கடத்திய வெள்ளி கட்டிகளை பறிமுதல் செய்த SMART KHAKI'S
கோவை மாவட்டம், கே.ஜி.சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவங்கி வைக்கப்பட்ட SMART KHAKI'S
என்னும் திட்டத்தின் கீழ் காவலர்கள் ரோந்து சென்றனர் அப்பொழுது வாளையார் செக்போஸ்ட் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த பொழுது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை விசாரித்ததில் அவர்கள் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த நகுலன் மகன் அஜயன் 45 மற்றும் முகமத் நையுமதியின் மகன் முகமது வலியுதீன் என்றும் தெரியவந்தது . மேற்படி விசாரணை செய்த பொழுது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர் மேலும் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த பொழுது அதில் உரிய ஆவணங்கள் இன்றி தலா 100 கிராம் எடை கொண்ட 25 வெள்ளி கட்டிகள் மற்றும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கம் வைத்திருந்தனர் மேற்படி நபர்களிடமிருந்து உரிய ஆவணம் இன்றி வெள்ளிக் கட்டிகளை எடுத்துச் சென்றதால்
அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து கோவை மாவட்ட இணை ஆணையர் மாநில வரி நுண்ணறிவுப் பிரிவு அவர்களிடம் மேல் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டது
மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்
Comments
Post a Comment