மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவையில்  கள்ளச்சாராயம் விற்பனைக்கு வைத்திருந்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது



கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த வழக்கில் தொடர்புடைய காரமடை பகுதியைச் சேர்ந்த சிவா மகன்  வல்லரசு  23 என்பவரை காவல்துறையினர்  கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மேற்படி  நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்  கார்த்திகேயன் பரிந்துரை செய்தார்
அப்பரிந்துரையின் பேரில்  கோவை மாவட்ட ஆட்சியர்  பவன்குமார் க.கிரியப்பனவர் மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார் மேற்படி உத்தரவின்படி சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி  விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த வழக்கு குற்றவாளியான வல்லரசு 23 என்பவரை குண்டர்  (Bootlegger) தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்
மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எச்சரித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்