மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது 


கோவை மாவட்டம், கே.ஜி.சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த  ஜெயன் 50 என்பவர் நகை ஏலத்தில் எடுப்பதற்காக ரூபாய் 30 லட்சம் பணத்துடன் கேரளா செல்ல வேண்டி இருசக்கர வாகனத்தில் எட்டிமடை பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக நான்கு சக்கர வாகனத்தில் வந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த குட்டப்பன் மகன்  மனீஷ்  32 வித்யாதரன் மகன் விஷ்ணு  31 மற்றும் டேவிட் மகன்  ஜோசப்  27 ஆகியோர்கள் மேற்படி நபரிடமிருந்த பணத்தை வழிப்பறி செய்துள்ளனர் இந்நிலையில் வழிப்பறி வழக்கில் சம்மந்தப்பட்ட மேற்படி நபர்களை காவல்துறையினர்  கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மேற்படி  நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல்கண்காணிப்பாளர்  K.கார்த்திகேயன் பரிந்துரை செய்தார்
அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர்  பவன்குமார் க.கிரியப்பனவர் மேற்கண்ட நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார் மேற்படி உத்தரவின்படி  வழிப்பறி வழக்கு குற்றவாளிகளான மனீஷ்  32 விஷ்ணு  31 மற்றும்  ஜோசப்  27 ஆகியோர்களை குண்டர்  தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்