மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சியில் ஆசை வார்த்தை கூறி தங்க நகையை திருடிய நபர் கைது
பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் வசிக்கும் சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த 27.06.2025 அன்று சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அச்சமயம் அங்கு நின்று கொண்டிருந்த நபர் மருத்துவமனையின் மேல் மாடியில் இலவசமாக தங்க கம்மல் கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்று அப்பெண்ணின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க செயினை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி திருடிச் சென்றுள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேற்படி திருட்டு வழக்கில் விரைந்து குற்றவாளியை கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.கார்த்திகேயன் உத்தரவிட்டதன் பேரில், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் புலன் விசாரணை மேற்கொண்டும், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், புலன்விசாரணை செய்து வந்த நிலையில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் சித்திரவேல் (49) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி பெண்ணை ஏமாற்றி திருடியதை ஒப்புக்கொண்டதன் பேரில், மேற்படி சித்திரவேலை கைது செய்து, அவரிடமிருந்து மேற்படி வழக்கின் செத்துக்களான சுமார் 03 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர் மேலும் விசாரணையில் மேற்படி நபர் சுமார் 40 குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.
சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்
குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என தெரிவித்தார்
Comments
Post a Comment