மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சி நவமலை வன பகுதியில் மலைவாழ் மக்களின் குடிசைகள் கனமழையால் சேதம்
சார்- ஆட்சியரிடம் மலைவாழ் மக்கள் மனு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பாத்திற்க்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர் தங்களது வாழ்வாதாரத்தை போக்க கூலி வேலைகளுக்கும் விவசாயி பணிகளுக்கும் சென்று வருகின்றனர் இவர்கள் அனைவரும் ஆழியாறு அணை கட்டுமான பணிகளின் போது அங்கிருந்து வெளியேற்றி நவமலை செல்லும் வழியில் குடியமர்த்தப்பட்டனர் ஆனால் அவர்களுக்கு தேவையான எவ்வித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி தரவில்லை
இந்நிலையில் சாலை பணிகளுக்காக சில தினங்களுக்கு முன்பு சரக்கு வாகனத்தில் செல்லும்போது ஆழியார் அருகே நடைபெற்ற கூட்டத்தில் ஐந்து பேர் உயிர் இழந்தனர் சுமார் 14 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பி உள்ளனர்
தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் கடும் மழை பெய்து வருகிறது இதனால் ஓலை குடிசைகளில் வாழும் மலைவாழ் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள தங்களது ஓலை குடிசைகளை சீரமைத்து தருமாறு அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித தீர்வு ஏற்படவில்லை மேலும் திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி மன்ற உறுப்பினர் அப்பகுதிக்கு ஒரு முறை கூட எட்டிப் பார்க்கவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்
மேலும் மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தங்களது குடிசைகளுக்கு செல்லும் பாதையில் உள்ள பாலத்தை தண்ணீர் மூழ்கடித்து செல்வதால் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது இரவு நேரங்களில் வயதான முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் மிகவும் அச்சத்துடன் வாழும் தங்களை அரசு அதிகாரிகளோ வனத்துறையினரோ கண்டு கொள்வதில்லை என பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்
Comments
Post a Comment