மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவையில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர்  குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது



கோவை மாவட்டம்,  அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக தேனி மாவட்டத்தை சேர்ந்த சென்ராயன் மகன் வெள்ளைப்பாண்டி (எ)காசி 23 மற்றும் முருகன் மகன் மாரிமுத்து@மாரி 29 ஆகியோர்கள்
 மீது அன்னூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் மேற்படி  நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் K.கார்த்திகேயன்   பரிந்துரை செய்தார்
அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர்  பவன்குமார் க.கிரியப்பனவர்  மேற்கண்ட நபர்கள் மீது  குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார் மேற்படி உத்தரவின்படி  வழிப்பறி வழக்கின் குற்றவாளிகளான வெள்ளைப்பாண்டி@காசி  23 மற்றும் மாரிமுத்து@மாரி  29 ஆகியோர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். பொதுமக்கள் தங்களது பகுதிகளில் இதுபோன்ற குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க 94981-81212 மற்றும் வாட்ஸ் அப் எண்  7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்