மக்கள் வெளிச்சம் நாளிதழ்
சென்னை லயோலா கல்லூரியில், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலுடன் (TNSCST) இணைந்து ஏற்பாடு செய்த அறிவியல் விழாவில் எங்கள் சென்னை பெரம்பூரில் உள்ள சென்ட் மேரிஸ் மெட்ரி குலேசன் ஆண்கள் மேல்நிலைபள்ளியின் சார்பில் 11 சி பிரிவு மாணவர்கள் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் 100 பள்ளிகள் கலந்து கொண்டனர்.
இதில் சென்ட் மேரிஸ் மெட்ரிகுலேசன் ஆண்கள் மேல்நிலைபள்ளியின் மாணவர்கள் எஸ்.கே. அப்துல் ஷாஹித் ஹமீத்,
ஜே. தீபக் குமார்,
ஆர்.எஸ். கௌஷிக்,
கே. விமல் குமார், ஆகியோர் "செயற்கை கருப்பை" என்ற தலைப்பில் உயிரியல் திட்டப் பிரிவில் அவர்கள் தயாரித்த "செயற்கை கருப்பை"
முதல் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றனர்.
அதேபோல் சென்னை ஆஸ்ரம் குரூப் ஆஃப் இன்ஸ்டியூட் சார்பில் நடைபெற்ற தனி நபர் "ராம்ப் வாக்" போட்டியில் சென்னை பெரம்பூர்
சென்ட் மேரிஸ் மெட்ரி குலேசன் ஆண்கள் மேல்நிலைபள்ளியின் சார்பில் 11 சி பிரிவு மாணவர்
எஸ் கே அப்துல் ஷாகித் ஹமீத் முதல் பரிசை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் அவருக்கு 2000 கேஸ் பிரைஸ் கொடுக்கப்பட்டது. ஆசிரியர்கள் நட்ராஜ்,லஷ்மி நாராயணன் உடன் இருந்தனர்.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பள்ளியின் முதல்வர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவர்கள் அனைவரும் வாழ்த்து கூறி பாராட்டினர்.
சென்ட் மேரிஸ் மெட்ரி குலேசன் ஆண்கள் மேல்நிலைபள்ளி
Comments
Post a Comment