மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மேட்டுப்பாளையத்தில்  6 கிலோ கஞ்சா பறிமுதல்  3 பேர் கைது 



 கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து போதைப்பொருள் இல்லாத சமூகத்தை  உருவாக்கும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  K.கார்த்திகேயன்  நேரடி மேற்பார்வையில் பல்வேறு அதிரடித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன  இதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் மூன்று நாட்கள் Operation- Drug Free கோவை  என்ற பெயரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய சுமார் 927 நபர்களின் பட்டியலானது சேகரிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டது மேற்படி பட்டியலில் உள்ள தரவுகளின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
அதன் தொடர்ச்சியாக  மேட்டுப்பாளையம் காவல் நிலைய காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்  பேரில் காவல் ஆய்வாளர் தலைமையில் தாசம்பாளையம் அருகில் சென்று சோதனை மேற்கொண்ட போது சட்டத்திற்கு விரோதமாக  கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த  மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணராஜ் மகன் கரிமேடு ஆனந்த்(எ) ஆனந்தகுமார்  34 புவனா ஷாகு மகன் மனோஜ் ஷாகு 27 மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் ராஜ்குமார்  47 ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 6 கிலோ கஞ்சாவை  பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர் மேலும் மேற்படி  கரிமேடு ஆனந்த்@ ஆனந்தகுமார் 34 என்பவர் மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் சுமார் 10 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என தெரிவித்தார்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்