மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவையில் வடமாநிலத்தினரிடம் மிரட்டி பணம் பறிப்பு 


ஆட்டோ ஓட்டுனர்கள் 3 பேர் கைது


 கோவை மாநகர பந்தயசாலை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட இரயில் நிலையப் பகுதிகளில் ஆட்டோ ஓட்டி வந்த கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியைச் சேர்ந்த  முகமது அசாருதின், அன்னூர் தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த  நௌபல் பாஷா செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், ஆகியோர்களிடம் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஷிவ்குமார் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த குஷால் பிஷ்வாஸ், அலி காதர் ஷேக் ஆகியோர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு கோவை இரயில் நிலையம் வந்திறங்கி, அவர்கள் வேலை செய்யும் இடங்களான குன்னூர் மற்றும் மதுக்கரை செல்வதற்காக ஆட்டோ வாடகைக்கு கேட்டுள்ளார்கள்.
அப்போது  செந்தில்குமார் தனது ஆட்டோவில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த நபர்களையும் நௌபல் பாஷா, உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த நபரையும் ஏற்றிக்கொண்டு அவர்கள் கூறிய இடத்திற்கு அழைத்துச் செல்லாமல் கோவை ஆவாரம்பாளையம் இரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் கொண்டு சென்று மேற்படி முகமது அசாருதின் நௌபல் பாஷா, செந்தில்குமார் ஆகியோர்கள் சேர்ந்து மேற்படி நபர்களிடம் ஆளுக்கு 10,000/- ரூபாய் தர வேண்டும் என மிரட்டி பேரம் பேசி நேரடியாகவும் அவர்கள் பெற்றோர்கள், உறவினர்கள் மூலமாக ஜிபே ல் மொத்தமாக ரூபாய் 13,000/- பெற்றுக்கொண்டு விடுவித்துள்ளார்கள் இதை அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் பொறுப்பாளர்களான முகமது இஃபால், தேவன் ஆகியோர்களிடம் தெறிவித்து அவர்கள் மேற்கண்ட இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு காவல் நிலையம் வந்து கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் கோவை மாநகர வடக்கு துணை ஆணையர் அவர்களுடைய மேற்பார்வையில் உடனடியாக சி2 பந்தயசாலை காவல் நிலையத்தில் சட்டத்திற்கு விரோதமாக தடுத்து நிறுத்தி, அச்சுறுத்தி பணம் பறித்தல் என இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து துரித நடவடிக்கை எடுத்து மேற்படி குற்றவாளிகளை கைது செய்தனர்
மேற்படி குற்றவாளிகளை விசாரிக்கையில் இரயில் நிலையத்திற்கு வரும் தமிழ் மொழி தெரியாத பயணிகளைக் குறி வைத்து அவர்களை, அவர்கள் செல்லும் இடத்திற்கு அழைத்துச் செல்வதாக ஏமாற்றி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் மிரட்டி ஜிபே போன்ற பணப்பரிவர்தணைகள் மூலமாக பணம் பறித்து வந்தது உண்மை எனத் தெரிய வருகிறது இது தொடர்பான புலன் விசாரணை மேற்கொண்டு வருவதோடு அப்பகுதி பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு கோவை மாநகர காவல் ஆணையரின் அறிவுறுத்தலின்படி இது குறித்து சி2 பந்தயசாலை காவல் நிலைய ரோந்து அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்