மக்கள் வெளிச்சம் நாளிதழ்
தாயைப் பிரிந்த குட்டி யானை ஆனைமலை புலிகளில் காப்பகத்தில் கோழி கமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் விடப்பட்டது
கோவை வனக்கட்டம் சிறுமுகை வனச்சரகத்தில் 26.05.2025 அன்று தாயை பிரிந்த நிலையில் மீட்கப்பட்ட குட்டி யானையினை, யானைக் கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சி 12.06.2025 அன்று வரை நடைபெற்றது. சிறுமுகை வனச்சரகம் வனப்பகுதி மற்றும் கோவை வனக்கோட்டத்திற்கு
உட்பட்ட வனப்பகுதிகளில் யானையை கூட்டத்துடன் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களில் பெய்த மழைக் காரணமாக, யானைக் கூட்டம் .வனப்பகுதிகளில் தென்படவில்லை. சிறுமுகை வனச்சரகத்தின் அருகோ உள்ள முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதிளிலும் யானைக்குட்டியை யானைக் கூட்டத்துடன் சேர்க்க முயற்சி மீண்டும் மேற்கொள்ளப்பட்டது தற்போது முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனஉயிரினக் காப்பாளர் அவர்களின் ஆணைப்படி, மீட்கப்பட்ட குட்டி யானையானது, ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக்கோட்டம், கோழிக்கமுத்தி யானைகள் முகாமிற்கு பாதுகாப்பாக உரிய வழிமுறையை பின்பற்றி கொண்டு செல்லப்பட்டது ஆனைமலை புலிகளில் காப்பகம் வனச்சரகர் வெங்கடேஷ் கூறுகையில் சிறுமுகையில் தாயைப் பிரிந்து குட்டி யானையை வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் உலாந்தி வனச்சரகம் டாப்ஸ்லிப் கோழி கமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் இந்த குட்டி யானை கரோலில் விடப்பட்டு அதற்குண்டான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு பராமரிக்கப்படுகிறது இதற்காக சிறப்பாக வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வளர்ப்பு யானைகளை பராமரிக்கும் பாகன் காவடி உள்ளிட்டோர் இந்த குட்டி யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் மேலும் இப்பகுதியில் காட்டு யானைகள் நடமட்டும் உள்ளதால் வனத்துறையினர் விழிப்புணர்வுடன் உள்ளனர் என தெரிவித்தார் .
Comments
Post a Comment