மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டு வரப்பட்டதாகப் பரவுவது பொய்யான செய்தி
நெகமம், காணியாலம்பாளையத்தில் பாலகிருஷ்ணன் என்பவரின் சொந்த நிலத்தில் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் கொண்டுவரப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரவியுள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு மாறானது. நிலத்தில் உள்ள பாறைக்குழி நிரப்புவதற்கு பழைய மோட்டார் வாகன சீட் சுவர்கள், ஸ்பாஞ்சு போன்ற கழிவுகளுடன் வணிக கழிவுகள் மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக தண்ணீரில் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் ஏற்பட்டது.நெகமம் காவல் நிலைய காவலர்கள் மற்றும் தாசில்தார் உள்ளிட்ட வருவாய் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். வருவாய் துறை ஆய்வில், அங்கு எந்தவிதமான மருத்துவக் கழிவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.
மாவட்ட நிர்வாகத்தால் நில உரிமையாளருக்கு உடனடியாக அந்த கழிவுகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது மேலும் இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என காவல்துறையால் எச்சரிக்கப்படுகிறது.
Comments
Post a Comment