மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சி நகர தி.மு.க.வில் நியமிக்கபட்ட பொறுப்பாளர்கள் 
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிப்பு 

பொள்ளாச்சி நகர திமுகவிற்கு புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமுதபாரதி திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து பணிகளை துவக்கினார்.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் மொத்தம் 88 பூத்கள் உள்ளன. இதில் பொள்ளாச்சி நகரத்தை வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரித்து வடக்கில் 19 வார்டுகள், தெற்கிற்கு 17 வார்டுகள் ஒதுக்கப்பட்டன. பொள்ளாச்சி நகர வடக்கிற்கு பொறுப்பாளராக நகரச் செயலாளர் நவநீதகிருஷ்ணனும், பொள்ளாச்சி நகர தெற்கு பகுதிக்கு பொறுப்பாளராக தலைமை செயற்குழு உறுப்பினர் அமுதபாரதியும் நியமிக்கப்பட்டனர்.
கட்சித் தலைமை இதற்கான முறையான  அறிவிப்பை வெளியிட்ட நிலையில், நகர தெற்கு பகுதி பொறுப்பாளரான அமுதபாரதிக்கு திருவள்ளுவர் திடலில் திமுக நிர்வாகிகள் சார்பில் மேளதாளம் முழங்க உற்சாக  வரவேற்பு அளிக்கப்பட்டது. 
இதனை தொடர்ந்து திடலில் அமைந்துள்ள திருவள்ளூர் சிலைக்கும், திமுக தலைவரகளின் உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் பொள்ளாச்சியில் திமுக வெற்றி பெற வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து அரசின் நான்கு ஆண்டு சாதனைகளை எடுத்துக் கூற உள்ளோம். உண்மையாக பணியாற்றி உதயசூரியன் பொள்ளாச்சியில் உதிக்க சிறப்பான முறையில் செயலாற்றுவோம். 2026 மீண்டும் தமிழக முதல்வராக தளபதியார் பதவி ஏற்பது உறுதி. இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து ஜோதி நகர் 36வது வார்டில் மழையால் சுவர் இடிந்து விழுந்த மகாலட்சுமி என்பவர் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி, அவர்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவி தொகை வழங்கினார். 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் ராசு, ரமேஷ், யுவராஜ், நகராட்சியின் துணைத் தலைவர் கௌதமன், கவுன்சிலர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்