மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சி கோவை ரோடு சக்தி ஹோட்டல் ஹாலில் புன்னகை இலக்கிய அமைப்பு பொள்ளாச்சி இலக்கிய வட்டம் சார்பில் புன்னகை இலக்கிய விருது வழங்கும் விழா நடைபெற்றது சிறப்பு விருந்தினர்களாக நற்றமிழ் காவலர் பத்மஶ்ரீ சிற்பி பாலசுப்பிரமணியம், விஜயா பதிப்பகம் மு.வேலாயுதம், தமிழிசை சங்கம் அரிமா ம.சண்முகம், எழுத்தாளர் ரவிவாமனன் கலந்து கொண்டனர். எழுத்தாளர் அமிர்தம் சூர்யா சிறப்புரையாற்றினார் எழுத்தாளர் சீராளன் ஜெயந்தன், எழுத்தாளர் பொன் மூர்த்தி சிற்றுரை வழங்கினர்.
2025 ஆம் ஆண்டின் புன்னகை இலக்கிய விருது கோவையைச் சார்ந்த சி. 'தமிழ்' மணிகண்டனின் சீரிய தமிழ்பணியைப் பாராட்டிச் சிறப்பிக்கும் வகையில் புன்னகை இலக்கிய அமைப்பு மற்றும் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் இணைந்து விழாவில் எழுத்தாளர் அம்சப்ரியா மற்றும் புன்னகை ரமேஷ் ஆகியோரால் அவருக்கு புன்னகை தமிழ்ப் பற்றாளர் விருது வழங்கிச் சிறப்பித்தனர். மேலும் கவிஞர் நிலாதரன், கவிஞர் சாய்மீரா, கவிஞர் செ.ஜா.அரசி மார்லின், உதிரிகள் இதழ், சங்கு இதழ் ஆகியோருக்கும் புன்னகை இலக்கிய விருது வழங்கப்பட்டது கவிஞர் ஜே.தமிழ்ச்செல்வன் நன்றியுரை வழங்கினார்.
Comments
Post a Comment