மக்கள் வெளிச்சம் நாளிதழ்

வால்பாறை சோலையார் டேம் பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு.

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட மானாம்பள்ளி வனச்சரகம் பகுதிக்கு உட்பட்ட. சோலையார் டேம் இடது கரை பகுதியில் குடியிருந்து வந்துள்ள மேரி வயது 67  நள்ளிரவு ஒன்று முப்பது மணி அளவில் மேரியின் வீட்டின் பின்புறம் யானை உடைத்ததை பார்த்து மேரி சத்தமிட்டு வெளியே ஓடி உள்ளார். யானை அவரை விரட்டி அவர் வீட்டின் அருகில் உள்ள புதருக்குள் வைத்து தாக்கியதில் பரிதாபமாக உயிர் பிரிந்தது மேலும் அப்பகுதியில் ஒரு வருட காலமாக நகராட்சி மின் கம்பத்தில் தெருவிளக்கு அமைத்தும் மின் இணைப்பு தராததால் எரியாமல் உள்ள மின் விளக்கும் இதற்கு ஒரு காரணம் என வால்பாறை நகராட்சி அதிகாரிகள் மீதும்  பொதுமக்கள் ஆக்ரோசமாக கூறுகிறார்கள் மேலும்  வனத்துறை மற்றும்  காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு இறந்தவரின் உடலை வால்பாறை அரசு மருத்துவமனையில் உடல் கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர் வால்பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள்.  அச்சமடைந்துள்ளனர்  நகராட்சி அதிகாரிகளும் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்