மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி
மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கோவை மாவட்டம். பொள்ளாச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய்த் தீர்வாயத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ககிரியப்பனவர் பெற்றுக் கொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இம்முகாமில் பொள்ளாச்சி வட்டாட்சியர் சு.வாசுதேவன், பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் கணேஷ் தனிவட்டாட்சியர் (குடிமைப்பொருள்) சத்திரியன் உதவி இயக்குநர்(நில அளவைகள் மற்றும் பதிவேடுகள் துறை) சரவணன், துணை வட்டாட்சியர்கள் வித்யா(வடக்கு) சுந்தர்ராஜ்(தெற்கு) தனி வட்டாட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் குமரிஆனந்தன். தனி வட்டாட்சியர் ஆதிதிராவிடர் நலத்துறை சரவணகுமார். தலைமையிடத்து துணை வட்டாட்சியர் வினோத் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தின் போது கோரிக்கை மனுக்கள் வழங்கிய 3 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாறுதல்களையும். 2 பயனாளிகளுக்கு வாரிசு சான்றிதழ்களையும் என மொத்தம் 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை உடனடியாக மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் வருவாய் துறையின் மூலம் ஒவ்வொரு வருடமும் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நடத்தப்பட்டு வருவாய்துறையின் கோப்புகள் ஆற்றிய பணிகள் குறித்து சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் கிராம அளவில் தணிக்கை செய்யப்பட்டு வருகின்றது.
கோவை மாவட்டத்தில் 1434ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் 11 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 20.05.2025 முதல் 28,052025 வரை நடைபெற்று வருகின்றது. அதன்படி பொள்ளாச்சி வட்டத்திலுள்ள கிராமங்களின் 1434-ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம். வட்டாட்சியர் அலுவலகத்தில் 20.05.2025 முதல் 27.05.2025 வரை(அரசு விடுமுறை நாட்கள் தவிர நடைபெறவுள்ளது. பொள்ளாச்சி உள்வட்டத்திற்குட்பட்ட ராமபட்டிணம். பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு பெரிய நெகமம், கோலார்பட்டி ஆகிய வட்டங்களில் நடைபெறுகின்றது. அதன்படி, ராமபட்டிணம் உள்வட்டத்திற்குட்பட்ட புரவிபாளையம். சேர்வக்காரன் பாளையம். வடக்கிப்பாளையம், தேவம்பாடி ராமபட்டிணம். மண்ணூர், குமாரபாளையம், திம்மங்குத்து. நல்லூத்துக்குளி அய்யம்பாளையம், ஜமீன்முத்தூர், தாளக்கரை, போடிபாளையம். ராசிசெட்டிபாளையம். குளத்தூர் ஆகிய ஊராட்சிகளுக்கு வருவாய் தீர்வாயம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
மேலும், 21.05.2025 பொள்ளாச்சி வடக்கு உள்வட்டத்திற்குட்பட்ட பூசநாய்க்கன்தளி. குள்ளிசெட்டிபாளையம், சந்தேகவுண்டம்பாளையம். ஒக்கிலிபாளையம், காபிலிபாளையம், சிக்கராயபுரம், ஆர்.பொன்னாபுரம், ஆச்சிப்பட்டி குரும்பபாளையம் குள்ளக்காபாளையம். தொப்பம்பட்டி வெள்ளாளபாளையம், அனுப்பர்பாளையம், ராசக்காபாளையம், புளியம்பட்டி கிட்டசூரம்பாளையம், டி.கோட்டம்பட்டி, சங்கம்பாளையம், பொள்ளாச்சி ஆகிய ஊராட்சிகளுக்கும். 22.05.2025 பொள்ளாச்சி தெற்கு உள்வட்டத்திற்குட்பட்ட ஜமீன்ஊத்துக்குளி சூளேஸ்வரன்பட்டி, ஜமீன் கோட்டாம்பட்டி, மாக்கினாம்பட்டி, சின்னாம்பாளையம், ஊஞ்சவேலம்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கும். 23.05.2025 பெரிய நெகமம் உள்வட்டத்திற்குட்பட்ட கள்ளிப்பட்டி, பெரியநெகமம், சந்திராபுரம், சின்னநெகமம். மூலனூர், கொண்டேகவுண்டம்பாளையம். ஆவலப்பம்பட்டி, ஆநாகூர். கொல்லப்பட்டி, போலிகவுண்டம்பாளையம் ஏரிப்பட்டி, திப்பம்பட்டி, பூசாரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளிலும், 27.05.2025 கோலார்பட்டி உள்வட்டத்திற்குட்பட்ட
சோளபாளையம், நாட்டுக்கல்பாளையம். நல்லாம்பள்ளி சீலக்காம்பட்டி கோமங்கலம், கோமங்கலம்புதூர் எஸ்.மலையாண்டிபட்டணம் கோலார்பட்டி கஞ்சம்பட்டி கூளநாயக்கன்பட்டி, சிஞ்சுவாடி ஊராட்சிகளுக்கும் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் நடைபெறவுள்ளன.
வருவாய் தீர்வாயத்தின் போது பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, குடும்பஅட்டை நத்தம் பட்டா மாற்றம். இலவச வீட்டுமனைப்பட்டா, நில அளவை. வேலைவாய்ப்பு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் உள்ளிட்ட 13 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் பவன்குமார் சுகிரியப்பனவர் அனைத்து மனுக்கள் மீதும் தனிக்கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
Comments
Post a Comment