மக்கள் வெளிச்சம் நாளிதழ்

போக்சோ வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை



 கோவை மாவட்டம் ஆழியார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 13 வயது  சிறுமியை பாலியல் தொல்லை  செய்த குற்றத்திற்காக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்  அங்கலக்குறிச்சி பெரியசாமி மகன் தினேஷ் குமார் 25 என்பவர் மீது ஆழியார் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் அவர்களால் வழக்குப்பதிவு செய்து மேற்படி நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்  மேற்கண்ட நபரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.கார்த்திகேயன்   பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர்,  மேற்கண்ட நபர் பாலியல் குற்றவாளி  என கருதி  தினேஷ்குமார்  25 மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார் அவ்வுத்தரவின்படி பாலியல் வன்புணர்ச்சி வழக்கு குற்றவாளியான தினேஷ்குமார்  25 என்பவரை சிறையில் இருந்த பொழுது குண்டர் தடுப்புச் சட்டத்தின் நடவடிக்கை கீழ்  எடுக்கப்பட்டது
மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எச்சரித்துள்ளார்

பொதுமக்கள் தங்களது பகுதிகளில் இதுபோன்ற குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க 94981-81212 மற்றும் வாட்ஸ் அப் எண்  7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்