மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சியில் 75 லிட்டர்  வெளிநாடு மற்றும் வெளி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல் 

விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது 




  பொள்ளாச்சியில் வெளிநாடு, வெளிமாநில மதுபானங்கள் சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்து வருவதாக கிடைத்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.கார்த்திகேயனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தேவாங்கபுரம் ஸ்ட்ரீட் மகாலிங்கபுரம் காவல் நிலைய பகுதியில்  சட்டத்திற்கு விரோதமாக  75 லிட்டர் வெளிநாடு மற்றும் வெளிமாநில மது பாட்டில்களை   விற்பனைக்கு வைத்திருந்த பொள்ளாச்சி ஆர்.கே.நகரைச் சேர்ந்த மணி மகன் மணிகண்டன்  58 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து மேற்படி பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்

இதுபோன்று சட்டவிரோதமாக வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு மது விற்பனையில்  ஈடுபட்டாலோ பிற போதைப் பொருட்களின் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர்  எச்சரித்துள்ளார் மேலும் 
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்