மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கொலை குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது





 கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலைய பகுதியை சேர்ந்த  ராமன் (34) என்ற நபரை கொலை செய்த குற்றத்திற்காக  சங்கர் (எ) சண்முகராஜ் (24) மீது கோவில்பாளையம்  காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தார். பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்கிற்கும் பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சங்கர் (எ) சண்முகராஜ் (24) என்பவர் மீது  குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்   பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர்  பவன்குமார் க.கிரியப்பனவர்  மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் கொலை  வழக்கு குற்றவாளியான சங்கர் @சண்முகராஜ் (24) என்பவரை குண்டர் தடுப்பு  சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

பொதுமக்கள் தங்களது பகுதிகளில் இதுபோன்ற குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க 94981-81212. மற்றும் வாட்ஸ் அப் எண்  7708-100100  என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்