மக்கள் வெளிச்சம் நாளிதழ்

வால்பாறையில். 73-ம் ஆண்டு பங்குனி உத்திர விழா. 


நாட்டின் ஏழாவது சொர்க்கம் என அழைக்கப்படும் கோவை மாவட்டம்  வால்பாறை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முருகப் பெருமானின் அவதாரத்தில் ஒன்றான சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று 73 ஆம் ஆண்டு பங்குனி உத்திர விழா நடைபெற்றது. மேலும் பங்குனி உத்திர விழாவில் பறவை காவடி எடுத்தும் ஊர்வலமாக மிக சிறப்பாக வால்பாறை அருகில் உள்ள கீழ் பேருந்து நிலையம் மைதானத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் பிரதான வால்பாறை குமரன் சாலை வழியாக  ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்துச் சென்றனர் . மற்றும் இவ்விழாவில் எஸ்டேட் பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முருகப்பெருமானை சிறப்பு தரிசனம் செய்தனர். மேலும் வால்பாறை  காவல்துறையினர் இன்று   பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளித்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் அனைத்து பொது மக்களுக்கும் அன்னதானம் நடைபெற்றது விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை கண்டுகளித்தனர். இதனைத் தொடர்ந்து எதிர்பாராமல் இரண்டு மணி நேரமாக வெளுத்து வாங்கிய கனமழையால் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்த பொது மக்கள் மன மகிழ்ச்சியோடு  சென்றனர்..


           நிருபர் வால்பாறை ஐயப்பன் 

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்