மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சியில்
நிழல் தரும் மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை கோரி பாஜகவினர் மனு
பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு முகாமில் பாரதிய ஜனதா கட்சி நகர தலைவர் பரமுகுரு நிர்வாகிகளுடன் வந்து மனு அளித்தார்
மனுவில் பொள்ளாச்சி நகராட்சி 11 வது வார்டுக்கு உட்பட்ட மகாலிங்கபுரம் ரவுண்டானா ஏ.எஸ்.டி.புரம் தாகூர் வீதி திருவள்ளுவர் வீதி உட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் நிழல் தரும் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன
எவ்வித இடையூரும் இன்றி போக்குவரத்திற்கு பாதிப்பில்லாத வளர்ந்த பசுமையான மரங்களை தங்கள் சுயலாபத்திற்காக ஒரு சிலர் ஈடுபட்டுள்ளனர்
மரங்களை வெட்டிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்
Comments
Post a Comment