மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சியில் 10வது சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா துவக்கம் அமெரிக்கா தாய்லாந்து பிரான்ஸ் உட்பட 8 நாடுகள் பங்கேற்பு



பொள்ளாச்சி:-ஜன-14
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பத்தாவது சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழா இன்று தொடங்கியது வெப்ப காற்று பலூன்கள் வெளிநாடுகளில் மட்டுமே பறக்க விடப்பட்ட நிலையில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக பொள்ளாச்சி பகுதியில் பறக்க விடப்படுகிறது. இந்த ஆண்டு 10 வது சர்வதேச பலூன் திருவிழாவில் அமெரிக்கா தாய்லாந்து ஆஸ்திரியா இங்கிலாந்து பிரான்ஸ் பிரேசில் மற்றும் பெல்ஜியம் நாடுகளில் இருந்து 12 பலூன்கள் வரவழைக்கப்பட்டு பொள்ளாச்சி ஆச்சிபட்டி மைதானத்தில் இருந்து வானில் பறக்க விடப்பட்டது அதிகாலை 6 மணிக்கே வந்த பைலட்கள்  ராட்சத பலூனில் வெப்ப காற்றை நிரப்பி அதற்கென பிரத்யேக பைலெட்டுகள் வானில் பொள்ளாச்சியை சுற்றி வந்தனர்  இன்று தொடங்கி 16ஆம் தேதி வரை பொங்கல் விடுமுறை நாட்களில் நடக்கும் பலூன் திருவிழாவை கான அதிகாலை முதலே உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து அதிக அளவில் பொதுமக்கள் குவிந்து வானில் பறக்கும் வெப்ப காற்று பலூன்களை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்