மக்கள் வெளிச்சம் நாளிதழ்
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய ஆளும் திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் அதிமுகவினர் பொள்ளாச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது பாலியல் வன்கொடுமை நடைபெற்ற சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் இன்று பொள்ளாச்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்து வாகனங்களில் அழைத்துச் சென்றனர்
Comments
Post a Comment