மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை நடத்தும் பொள்ளாச்சி திருவிழா துவக்கம். திருவிழா ஜோதியை ஏற்றி நிகழ்வை துவங்கி வைத்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தும் பொள்ளாச்சி திருவிழா நேற்று துவங்கியது. இந்த நிகழ்வில் விழா ஜோதியை எந்தியவாரு நகரின் முக்கிய வீதிகளான மகாலிங்கபுரம், பல்லடம் சாலை, புதிய திட்ட சாலை வழியாக ஜோதியை ஏந்தி வந்த விளையாட்டு வீரர்கள் இறுதியாக சர்க்கஸ் மைதானத்தில் நிறைவு செய்து கொண்டுவரப்பட்ட ஜோதியை கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அவர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் பொள்ளாச்சி திருவிழாவின் ஜோதியை ஏற்றிய காவல் கண்காணிப்பாளர் தேசிய கொடி மற்றும் பொள்ளாச்சி திருவிழாவின் கொடிகளை ஏற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த ஒன்பது நாட்கள் நடக்கும் திருவிழா பொள்ளாச்சியில் பல்வேறு இடங்களில் நடப்பதால் பொள்ளாச்சி மற்றும் வால்பாறை சரகம் ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்கவும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
Comments
Post a Comment