மக்கள் வெளிச்சம் நாளிதழ்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டித்து பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  பாமகவினர் கைது.




 தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அண்மையில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு வேறு வேலை இல்லாமல் அறிக்கையை தினமும் கொடுத்து வருகிறார் என கூறி இருந்தார். இதற்கு பாமக நிறுவனர் ராமதாசை இழிவாக பேசிய தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலினை கண்டித்து தமிழக முழுவதும் பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொள்ளாச்சி தலைமை தொலைபேசி நிலையம் முன்பு கோவை தெற்கு மாவட்ட செயலாளர் வீரான் ராவுத்தர் தலைமையில் தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலினை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதலமைச்சர் கண்டித்து கோஷம் எழுப்பிய பாமகவினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி செயலாளர் வாணி ஆறுமுகம், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி செயலாளர் கமல், கண்ணப்பன்,தங்கவேல், முருகேசன் உள்ளிட்ட பாமகவினர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்