மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சி அருகே தனியார் கல்லூரி மாணவர்களை தாக்கிய மர்ம நபர்கள். சி சி டிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு. 



பொள்ளாச்சி உடுமலை சாலை திப்பம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரிக்கு அருகாமையில் உள்ள பேக்கரியில் நேற்று முன்தினம் மாணவர்கள் மத்தியில் தள்ளுமுள்ளும் சலசலப்பு ஏற்பட்டது இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளியான சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கோமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் முதல் கட்ட விசாரணையில் ஊஞ்ச வேலம்பட்டி பகுதியில் சண்டை சேவல் வியாபாரம் செய்யும் முத்து குமார் என்பவருக்கும் தனியார் கல்லூரி மாணவரருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் நேற்று முன் தினம் கல்லூரி மாணவன் பேக்கரியில் இருந்ததை அறிந்த முத்துக்குமார் தனது நண்பர்களுடன் அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கல்லூரி மாணவ நண்பர்களுக்கும் முத்துக்குமார் நண்பர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது தற்போது கோமங்கலம் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்