மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை மாவட்ட பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி
மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவிப்பு
கோவை மாவட்டத்தில் 2024ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்த நாள்கள் தொடர்பில் கோவை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 15.10.2024, 16.10.2024 ஆகிய நாள்களில் கோவை, அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) கூட்ட அரங்கத்தில் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன. அப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெறும் பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முறையே முதல்பரிசு ரூ.5000/-, இரண்டாம்பரிசு ரூ.3000/-, மூன்றாம்பரிசு ரூ.2000/- என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன. மேலும், பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப்போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவுசெய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை ரூ.2000/-வீதம் வழங்கப்பெறவும் உள்ளன. பள்ளித் தலைமையாசிரியர்கள் அவர்தம் பள்ளி மாணவர்களிடையே முதற்கட்டமாக முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்மன்றம் வாயிலாக முதல் சுற்று பேச்சுப்போட்டிகள் கீழ்நிலையில் நடத்தி மாணவர்களைத் தெரிவு செய்து மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க முதன்மைக் கல்வி அலுவலர் வழியாகவும் கல்லூரிப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் கல்லூரிகளின் முதல்வர்கள் வழியாகவும் பின்வரும் முகவரியில் நேரில் / அஞ்சலில் அல்லது tamilvalar.cbe@gmail.com என்ற மின்னஞ்சலில் 10.10.2024ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.
பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாள் தொடர்பில் 15.10.2024, 16.10.2024 ஆகிய நாள்களில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி காலை 9.30 மணிக்கும் கல்லூரிப் போட்டி பிற்பகல் 02.30 மணிக்கும் தொடங்கப்பெறும். இப்போட்டிகளில் கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ/மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment