மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சி கடைவீதி பகுதியில் பொதுமக்களின் விநாயகர் சதுர்த்தி விழா.

பொள்ளாச்சி நகரின் 26 வது வார்டு பகுதியான கடைவீதி பகுதியில் அப்பகுதி பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர்.

தமிழகம் முழுக்க விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதன்படி பொள்ளாச்சி நகரில் பல்வேறு அமைப்புகள் பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே சிலைகள் வைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது..
அதன்படி பொள்ளாச்சி 26 வது வார்டுக்குட்பட்ட கடைவீதி பகுதியில் அப்பகுதி பொதுமக்களால் விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் 26 வது வார்டு கவுன்சிலர் எம். கே .சாந்தலிங்கம் தலைமையில் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்து அனைத்து மதத்தினரையும் அழைத்து இஸ்லாமிய சகோதரரான முபாரக் பாய் என்பவரை குத்து விளக்கேற்ற வைத்து விமரிசையாக கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் செய்து கொண்டாடினர்.

இதில் நேதாஜி இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ். கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம். ஜெயச்சந்திரன் சின்னத்தம்பி. கவர் கடை ராஜு மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்