மக்கள் வெளிச்சம் நாளிதழ்
108 ஆம்புலன்ஸில் பிரசவம் -ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தங்கவேல் அவசரகால மருத்துவ உதவியாளர் மணிகண்டனுக்கு குவியும் பாராட்டுக்கள்.
பொள்ளாச்சி அடுத்துள்ள ஜலத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாலசந்திரன் இவரது மனைவி காயத்திரி நிறை மாத கர்ப்பினியான காயத்திரிக்கு இன்று வீட்டில் இருந்த போது திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.,
அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர் உடனடியாக ஓட்டுனர் தங்கவேல் அவசரகால மருத்துவ உதவியாளர் மணிகண்டன் ஜலத்தூரில் உள்ள காயத்திரி வீட்டிற்கு விரைந்து சென்று ஆம்புலன்ஸில் ஏற்றி பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்து கொண்டு வந்தனர்.,
அப்போது வரும் வழியில் பிரசவ வலி அதிகரித்ததால் அவசரகால மருத்துவ உதவியாளர் மணிகண்டன் சிகிச்சை அளித்தார் சிறுது நேரத்தில் ஆம்புலன்ஸ்லேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது.,
தற்போது தாயும் சேயும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 108 ஆம்புலன்சில் சாமர்த்தியமாக செயல்பட்டு பிரசவம் பார்த்து தாய் மற்றும் குழந்தையை காப்பாற்றிய ஓட்டுனர் தங்கவேல் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் மணிகண்டனை உறவினர்களும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.
Comments
Post a Comment