மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சியில் வாசவி இன்டர்நேஷனல் கிளப் சார்பில் ஒரு கோடி விதை பந்துகள் தயாரித்து விழிப்புணர்வு.
பொள்ளாச்சி பகுதியில் வாசலில் இன்டர்நேஷனல் கிளப்பு சார்பில் தமிழ்நாடு,கேரளா, ஆந்திரா,கர்நாடகா, போன்ற மாநிலங்களில்
உள்ள வாசவி இன்டர்நேஷனல் கிளப்பினர் சுமார் 1கோடி விதை பந்துகளை உற்பத்தி செய்யும் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
தற்போது நிலவி வரும் கால சூழ்நிலை காரணமாகவும் அதிகப்படியான ரோடு விரிவாக்கம் மற்றும் வீட்டு மனைகள் விரிவாக்கத்திற்காக மரங்கள் பெரும்பாலும் அளிக்கப்பட்டதால் அதிகப்படியான இடங்களில் சுமார் வெயில் 102 டிகிரியை கடந்துள்ளது.
இனி வரும் எதிர்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு சுமார் ஒரு கோடி விதை பந்துகளை உருவாக்கி அதனை வரும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று இந்தியா முழு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இதனை துவா இருப்பதாகவும் இதன் மூலம் குறைந்தது 50 லட்சம் மரங்களாவது வளரும் இதனால் வரும் காலங்களில் மழையளவு அதிகரிக்கும் என்றும் மக்கள் விழிப்புணர்வுக்காக பொதுமக்கள் மத்தியில் விதைத்தந்தை உருவாக்கும் நிகழ்ச்சியை நடத்தியதாகவும் பொள்ளாச்சி வாசவி கிளப்பின் நகரத் தலைவர் லட்சுமிபதி ராஜு தெரிவித்தார்
இதில் செயலாளர் பரணிதரன் முருகன் மனோஜ் நாகராஜ் கண்ணன் ஜோதி என கிளப் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment