மக்கள் வெளிச்சம் நாளிதழ்

ராமர் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை ஆயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் 




பொள்ளாச்சி அடுத்த தமிழக கேரள எல்லையை ஒட்டி உள்ள கோபாலபுரம் மீனாட்சிபுரம் இடையே உள்ளது ராமர் பண்ணை. இங்கு எழுந்தருளி உள்ள ராமர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பதால் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்காண பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள வந்து செல்கின்றனர் நேற்று புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை ஒட்டி அதிகாலை முதலே பக்தர்கள் வருகை புரிந்த வண்ணம் இருந்தனர். பகவான் ராமருக்கு பல்வேறு வகையான பூக்களை கொண்டு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
பக்தர்கள் கால்நடைகள் வாகனங்கள் வீடுகள் கொண்ட உருவார பொம்மைகளை கோவில் வளாகத்தில் வைத்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற கோரி வழிபாடு செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்