மக்கள் வெளிச்சம் நாளிதழ்

அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டா இடத்தை அளவீடு செய்து தர பயனாளிகள் சார் ஆட்சியரிடம் கோரிக்கை 



பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் குறை தீர்ப்பு முகாமில் போடிபாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை கோரி புகார் மனு அளித்தனர
பொள்ளாச்சி அடுத்த போடிபாளையம் ஊராட்சியில் 19.6.2016ம் ஆண்டு ஏழை எளிய கூலி வேலைக்குச் செல்லும் தாழ்த்தப்பட்ட மக்கள் 28 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா அரசு சார்பில் வழங்கப்பட்டது பயனாளிகள் 28 பேரும் தங்களுக்கு வழங்கிய இலவச வீட்டு மனைகளை அளவீடு செய்து தருமாறு வருவாய் துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை அளித்து வந்தனர் இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா 28 பயனாளிகளில் 12 பேரை தகுதியற்றவர்களாக கூறி பட்டாவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நீதிமன்றம் இலவச வீட்டு மனை பட்டா சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ளுமாறு வருவாய் துறையினருக்கு  உத்தரவிட்டது
இதனை அடுத்து ஜனநாயக உரிமைகளுக்கான கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் 2016 ஆம் ஆண்டு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டா இடங்களை அளவீடு செய்து தராமல் காலம் தாழ்த்திய வருவாய் துறையினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா மீது நடவடிக்கை எடுத்து தங்களுக்கு வழங்கிய வீட்டுமனையை அளவீடு செய்து தர வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட செயலாளர்  வழக்கறிஞர் சி.அசோக்குமார் மாவட்ட செய்தி தொடர்பாளர்  தமிழ்க்குமரன் ஆம் ஆத்மி கட்சியின் பொள்ளாச்சி சட்டமன்ற பொறுப்பாளர்  வழக்கறிஞர் மனோஜ் சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி பொறுப்பாளர்  செல்லமுத்து   சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி செயலாளர்  உசேன் அலி உள்ளிட்ட கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்