மக்கள் வெளிச்சம் நாளிதழ்
நகர மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கல்லூரி மாணவிக்கு கல்வி உதவித்தொகை.
பொள்ளாச்சி 26 ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் சமையல் தொழில் செய்யும் கூலித் தொழிலாளியின் மகளுக்கு நகர மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கல்வி கட்டண உதவித்தொகை வழங்கப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் பொள்ளாச்சி நகராட்சி நகர் மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நிதியிலிருந்து 26வது வார்டு நகர மன்ற உறுப்பினர் எம் .கே .சாந்தலிங்கம்
அப்பகுதியில் வசித்து வரும் நலிந்த நிலையில் சமையல் தொழில் செய்து வரும் கூலித் தொழிலாளியின் மகள் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு வணிகவியல் பயின்று வருவதால்
அவருக்கான கல்வி கட்டண உதவித் தொகையை வழங்கினார்..
பொள்ளாச்சி காந்தி மண்டப சாலையில் உள்ள நகர மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ராமசாமி ஜெயச்சந்திரன் மற்றும்
சிபிசக்கரவர்த்தி சக்திவேல் மாணவியின் தந்தை மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment