மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது



பீகார் மாநிலத்தைச் சேர்ந்த விகாஷ் குமார் என்பவர் தனது மனைவியுடன் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நெகமம் பகுதியில் உள்ள தென்னை நார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார், இந்நிலையில் விகாஷ் குமார் மனைவியின் தங்கையான 17 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார் சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சிறுமியின் அக்கா மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் இதனையடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் சிறுமியிடம் விசாரனை மேற்கொண்டனர் 
வழக்கு பதிவு செய்த போலீசார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த விகாஷ்குமாரை       போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்