மக்கள் வெளிச்சம் நாளிதழ்

ஆனைமலை அருகே  மாந்தோப்பில் எரிசாராயம் பதுக்கி வைத்திருந்த நபர் தூக்கு போட்டு தற்கொலை.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பெரம்பாவூர் பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் டோனி இவருக்கு சொந்தமான மாந்தோப்பு தமிழக கேரள எல்லை பகுதியான செம்மணாம்பதி கிராமத்தில் உள்ளது. இவரது தோட்டத்தை சபீஸ் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார். இவர் தோட்டத்தில் எரிசாரயம் பதுக்கி வைத்திருப்பதாக கேரள மாநிலம் கலால் துறை போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதன் பேரில் கேரளா போலிசார் தமிழக காவல் துறையின் உதவியுடன் கேரள மாநில கலால் துறை துணை கமிஷனர் ராகேஷ் தலைமையிலான குழு தோட்டத்தில் புகுந்து சோதனை மேற்கொண்டனர் அப்போது அங்கு 35 லிட்டர் கொள்ளலவு கொண்ட 150 கேன்களில் 4500 லிட்டர் எரிசாரயம் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது .இதனிடையே தோட்டத்தை குத்தகை எடுத்த சபீஸ் தப்பி தலைமறைவானார் கேரள போலீசார் தேடி வந்த நிலையில் சபீஸ் தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் உடலை கைப்பற்றிய பாலக்காடு போலிசார் பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

தோட்ட உரிமையாளர் மருத்துவர் டோனியிடம் தமிழக போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கைப்பற்றிய எரிசாராயத்தை கேரள போலீசார் ஆனைமலை காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்