மக்கள் வெளிச்சம் நாளிதழ்

ஆனைமலை தாலுகா மீனாட்சிபுரம் பகுதியில் தமிழ்நாடு கேரளா நெடுஞ்சாலையில் புதிதாக  மதுபான கூடம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.மதுபான கூட்டத்திற்கு அருகில் இரண்டு மருத்துவமனைகளும் ஒரு பள்ளியும் இயங்கி வருகிறது.
இதனால் பள்ளி குழந்தைகளுக்கும் நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் அதிக பாதிப்பு ஏற்படுகிறது எனவே புதிதாக தொடங்கப்பட்டுள்ள மதுபான கூட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி நாடார் நல சங்கத்தின் சார்பாக பொள்ளாச்சி சார் ஆட்சியரிடமும் ஆனைமலை தாலுக்கா வட்டாட்சியர் அவர்களிடமும் வால்பாறை உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களிடமும் மனு அளிக்கப்பட்டது.இதில் நாடார் நல சங்க மாநிலத் தலைவர் முருகானந்தம் செயலாளர் அருண்குமார் பொருளாளர் முருகேசன் மீனாட்சிபுரம் தலைவர் நாகராஜ் பார்த்திபன் செயலாளர் மருதாச்சலம் இளைஞர் அணி தலைவர் ரவிக்குமார் ஜெயக்குமார் கோபாலபுரம் பிரபு ஆகியோர் மனு அளித்தனர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்