மக்கள் வெளிச்சம் நாளிதழ்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகின்ற 09.08.2024 காலை 11.00 மணிக்கு கோவை, அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி)-யில் நடைபெறும் அரசு விழாவில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை மாநிலஅளவில் துவக்கி வைக்கவுள்ளார்கள். இத்திட்டத்தின் மூலம் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் , அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ்வழியில்) பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படவுள்ளது. மேலும், இவ்விழாவில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயிரியல் துறை மற்றும் சமூக அறிவியல் துறை ஆகிய துறைகளுக்கான புதிய கட்டடங்களை திறந்து வைக்கவுள்ளார்கள்.
உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி, பாலக்காடு, பேரூர், செல்வபுரம், ஆகிய ஊர்களுக்கு விரைந்து செல்லும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.470கோடி மதிப்பீட்டில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை 3.8கி.மீ நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார்கள். இவ்விழாவில், அமைச்சர் பெருமக்கள், அரசு தலைமைச் செயலாளர், மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சமூக நல ஆணையர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சீர்மிகு பெருமக்கள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்
Comments
Post a Comment