மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை நோயாளிகள் நலச்சங்க நிர்வாக குழு கூட்டம் 





பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாதம் ஒருமுறை நடைபெறும் நோயாளி நல சங்க நிர்வாக குழு கூட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 
கூட்டத்தில் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து துறை தலைவர்கள் செவிலியர் கண்காணிப்பாளர்கள் அலுவலக கண்காணிப்பாளர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொள்ளாச்சி முனிசிபாலிட்டி அதிகாரிகள், கவுன்சிலர் சாந்தலிங்கம்,நோயாளி நல சங்க உறுப்பினர் வெள்ளை நடராஜ் முதலியார் கலந்து கொண்டனர். 
1. மருத்துவமனை வளாகம் நபெரியதாக ஆகி உள்ளதால் நோயாளிகள் ஒரு கட்டிடத்தில் இருந்து அடுத்த கட்டிடத்திற்கு செல்வதற்கு சி எஸ் ஆர் மூலமாக ஒரு பேட்டரி கார் வாங்க முடிவு தொண்டு நிறுவனங்களை அணுகலாம் என்று முடிவு செய்யப்பட்டது. 
2. ⁠ 462 உள் நோயாளிகளுக்கு தினமும் மூன்று வேளையும் உணவு எடுத்து இன்று கொடுப்பதற்காக மூன்று சக்கர மோட்டார் வாகனம் ஒன்று சிஎஸ்ஆர் நிதி மூலம் வாங்கலாம் கோரிக்கை வைக்கப்பட்டது.
3. முனிசிபாலிட்டி இடம் மருத்துவமனையின் பொதுக்கழிவுகள் தினம் தோறும் அகற்றுவதற்காக ஆலோசனை நடத்தப்பட்டது. 
4. ⁠ புதியதாக கட்டப்படவுள்ள ஜப்பான் ஜெயிக்கா கட்டிடம் குறித்து பொதுப்பணித்துறையின் அதிகாரிகள் இடம் சார் ஆட்சியர் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
5. ⁠ மருத்துவமனை சார்பாக தாய்ப்பால் வார விழா சிறப்பாக நடத்தப்பட்டது குறித்து சார் ஆட்சியர் அவர்கள் மருத்துவமனை குழந்தைகள் நலப் பகுதி நிர்வாகிகளை பாராட்டினார்கள்.
6. பொள்ளாச்சி பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை அணுகி மருத்துவமனைக்கு வேண்டிய மருத்துவ உபகரணங்கள் மற்ற பொருட்கள் கேட்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
7.பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாய்க்கு உபகரணங்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொடுப்பதற்காக சம்மதித்துள்ளார்கள் .அவருக்கு நோயாளி நல சங்க உறுப்பினர்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்