மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை வ.உ.சி மைதானத்தில் 
சுதந்திர  தினத்தினை முன்னிட்டு   நடைபெறவுள்ள சுதந்திரதின விழா 2024 -ல் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி   தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த உள்ளார்.
சுதந்திர தினத்தினை முன்னிட்டு கோவை  மாவட்டம், வ.உ.சிமைதானத்தில் நாளை (15.08.2024) வியாழக்கிழமை நடைபெறவுள்ள சுதந்திர தினவிழா 2024-ல் காலை 9.05 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி  தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ள உள்ளார். 
அதனைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பதக்கங்களையும்  மாவட்ட ஆட்சியர்  வழங்கி சிறப்பிக்க  உள்ளார். 
பின்னர், இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகாவில் நடைபெறுவது போன்ற அணிவகுப்பு கோவை மாநகர காவல் துறையின்  ஆயுதப்படையினரால் நடத்தப்படவுள்ளது அதனைத்தொடர்ந்து, காளப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் கோலாட்டமும்,  வாகராயம்பாளையம்  அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் ஒயிலாட்டமும், சிஎஸ்.ஐ பெண்கள் மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப்பள்ளி  மாணவியர்களின் கும்மியாட்டமும்,  நேஷனல் மாடல் மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் தேசிய ஒருமைப்பாட்டு நடனமும், பிஎஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் தேசிய ஒருமைப்பாட்டு நடனமும், ஒத்தக்கால் மண்டப அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் தேசிய ஒருமைப்பாட்டு நடனமும்,  ராமகிருஷ்ணா மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் தேசிய ஒருமைப்பாட்டு நடனமும், ஜிடி எம் மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் தேசிய ஒருமைப்பாட்டு நடனமும், கே.ஜி உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் தேசிய ஒருமைப்பாட்டு நடனமும், என மொத்தம் சுமார் 700 மாணவ மாணவியர்கள் கலந்துகொள்ளும் 9 கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. எனவே, நமது மாவட்டத்தைச் சேர்ந்த தேசபற்றாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் திரளாக பங்கு கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 
இந்நிகழ்ச்சியினை  பொதுமக்கள் வீட்டியிலிருந்து கண்டுகளிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரின்  சமூக ஊடக கணக்குகளான  கீச்சகம் (Twitter) Collector cbe  மற்றும் முகநூல்  (facebook)  Collector Coimbatore ஆகியவைகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்